Categories
உலக செய்திகள்

“இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை தொடருவோம்”….. பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் கடும் எச்சரிக்கை….!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் ஆயுதக்குழு பிரிவான அல்-குவாட்ஸ் பிரிகெடிஸ் தளபதி தைஷர் அல் ஜபரி கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் குழு ஆகியோர் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். எகிப்தின் கைரோ நகரில் எகிப்து தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்த பேச்சு வார்த்தையில் இஸ்ரேல் – பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. அமைதி ஒப்பந்தம் ஞாயிறுக்கிழமை இரவு 11.30 மணி முதல் அமலுக்கு வரத்தொடங்கியுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தத்தின்படி, தங்கள் அமைப்பை சேர்ந்த மூத்த தளபதிகளான ஹலில் அவாவ்டாவை அமைதி ஒப்பந்தம் நடந்த மறுநாளுக்குள், மற்றொரு தளபதியான ஷேக் பாஷிம் அல் ஷாதியை 2 வாரத்திற்குள் இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் இஸ்ரேல் சிறையில் உள்ள தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தெரிவித்துள்ளது. அவ்வாறு விடுதலை செய்யவில்லை என்றால் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடருவோம் என்று பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் தெரிவித்துள்ளது. மேலும்  இஸ்ரேல் – பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |