இஸ்ரோ நடத்தும் ஜியோ கம்ப்யுடேஷன் மற்றும் ஜியோ வெப் சேவைகள் தொடர்பான ஐந்து நாள் இலவச பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் ஜியோ கம்ப்யூடேஷனின் அறிமுகம், ஆன்லைன் புவியியல் தகவல் முறைமை, ஜியோ வெப் சேவைகளின் ப்ரோகிராமிங் வகுப்புகள், பைத்தான் மற்றும் ஆர் மென்பொருளின் அறிமுகம், வெப் ஜிஐஎஸ் சார்ந்த அடுத்தக்கட்ட தகவல்கள், கிளவுட் அடிப்படையில் தரவுகளைப் பயன்படுத்தும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் நான்காம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை நான்கு மணி முதல் 5.30 மணி வரை ஆங்கிலத்தில் வகுப்பு நடைபெறும். இதில் விருப்பமுள்ளவர்கள் elearning.iirs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.