Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டம்…. “கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் 2 பேர் தேர்வு”….!!!!!

இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் கோத்தகிரி பழங்குடியின மாணவர்கள் இரண்டு பேர் தேர்வாகி இருக்கின்றார்கள்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 செயற்கைக்கோள்கள் ஏவும் இஸ்ரோவின் திட்டத்தில் தமிழகம் சார்பாக விண்ணிற்கு ஏவப்படுகின்ற அகஸ்தியர் செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பும் செயற்கைகோள்குறித்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியை சேர்ந்த இருளர் பழங்குடியின மாணவர், மாணவி என இரண்டு பேருக்கு கிடைத்திருக்கின்றது.

இது பற்றி உரைவிட பள்ளி தலைமையாசிரியர் சமுத்திர பாண்டியன் கூறியுள்ளதாவது, இந்த பள்ளியில் மொத்தம் 131 மாணவ- மாணவிகள் பயின்று வரும் நிலையில் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி 75 செயற்கை கோள்களை விண்ணுக்கு ஏவும் இஸ்ரோவின் மெகா திட்டத்தில் தமிழ்நாடு சார்பாக அகஸ்தியர் என்ற பெயரில் செயற்கைக்கோள் ஒன்று வானில் செலுத்தப்பட இருக்கின்றது. இதில் அங்கு வர தமிழகத்தில் இருந்து 75 அரசு பள்ளி மாணவர்களை இஸ்ரோ தேர்வு செய்து இருக்கின்றது. அதில் பழங்குடியின பள்ளியிலிருந்து பத்தாம் வகுப்பு மடிக்கும் மாணவர் ராஜன் மற்றும் மாணவி ரேவதி உள்ளிட்டோர் 2 மாதங்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இஸ்ரோ மையத்தின் மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்து வருகின்றார்கள். செயற்கைக்கோள் ஏவப்படும் நாளில் அந்நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த இரண்டு மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |