பிரபலமான கோபுரத்தின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் பிரபலமான மெக்கா கடிகார கோபுரம் அமைந்துள்ளது. இது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கோபுரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மின்னல் தாக்கிய சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.