அனுமதியின்றி ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் 31 பேரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அவதிப்பட்டு வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதற்கு நகர தலைவர் அஷார் தலைமை தாங்கியுள்ளார்.
இதனை அடுத்து கம்பம் மெட்டு சாலையில் உள்ள பழைய தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். மேலும் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதால் கம்பம் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஊர்வலத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களை காமயகவுண்டன்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுவித்துள்ளனர்.