Categories
உலக செய்திகள்

“இஸ்லாமியர்கள்” என்று அழைக்க தடையா..? வாழ்வா. சாவா.? நிலையில் பாகிஸ்தான் குடும்பம்..!!

ஜெர்மனியில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பிரிவினர் நாடு கடத்தப்படவுள்ளதால் ஒரு குடும்பம் தவித்து வருகிறது. 

ஜெர்மனியில் அகமதியா இஸ்லாமியர்கள் பிரிவிலுள்ள ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் அகமது, அவரின் மனைவி சாகர் கல்சூம் மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேந்த ஒரு கூட்டத்தினர் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று நாடு கடத்தப்பட போகிறார்கள் என்று செய்தி வெளியானதை கேட்டு அஹமது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

அதாவது பாகிஸ்தானில் அகமதியா இஸ்லாம் பிரிவினர்கள் “இஸ்லாமியர்கள்” என்று அழைப்பதற்கு அனுமதி கிடையாது. மேலும் மசூதிகளிலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு “அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று அவர்கள் பிறரிடம் கூறினாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு தங்கள் நாட்டிலேயே அடிமைகளாக வாழ வேண்டிய நிலை இருப்பதால்  பள்ளிப்படிப்பை முழுமையாக கற்க முடியாமல் சாஹர் கல்சூமால் ஆரம்பக் கல்வியை கூட கற்கவில்லை. எனவே தங்கள் குழந்தைகளுக்காவது நல்ல கல்வி அளித்து அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று எண்ணத்தில்  ஜெர்மனிக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.

ஆனால் ஜெர்மனி இந்த வருடம் தேர்தலை சந்திக்க உள்ளதால் தங்கள் குடிமக்களை திருப்தி அடைய செய்வதற்காக புலம்பெயர்தல் தொடர்பில் கடுமையான விதியை பின்பற்ற முயன்று வருகிறது. இதனால் அகமதியா இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்களின் புகலிட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களின் நிலைமை வாழ்வா? சாவா? என்ற பதற்றத்தில் அகமதுவின் குடும்பத்தினர் மூன்று குழந்தைகளுடன் விழிபிதுங்கி நிர்க்கதியாக நிற்கின்றனர்.

Categories

Tech |