உத்திரப்பிரதேச மாநிலத்தில் சன்னியாசி ஒருவர் வெறுப்பு பேச்சுடன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள கைராபாத்தில் உள்ள சேஷே வாலி மஸ்ஜித் அருகே ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஒலிபெருக்கி மூலமாக சன்னியாசி ஒருவர் பேசி வந்தார். அவர் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசினார். இஸ்லாமியப் பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று அந்த சன்னியாசி பேசிய பேச்சை கேட்டு அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். இந்த இரண்டு நிமிட பேச்சு வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
https://twitter.com/zoo_bear/status/1512036559960248323
மேலும் உங்களில் யாராவது தேவையில்லாமல் ஒரு இந்து பெண்ணை அணுகினால் நான் இஸ்லாமிய பெண்களை பகிரங்கமாக கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருவதாகவும், உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.