Categories
மாநில செய்திகள்

இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறாக பேசிய ஹெச்.ராஜா மீது புகார் …!!

இஸ்லாமிய பெண்களைப் பற்றியும் ஷரியத் சட்டம் பற்றியும் தவறான கருத்துக்களைப் பரப்பி வரும் திரு. ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இமாம்ஸ் கவுன்சில் அமைப்பினர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

பாஜக உறுப்பினர் திரு. ஹெச்.ராஜா இஸ்லாமியக் கொள்கை மற்றும் இஸ்லாமிய பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் பொது இடங்களில் பேசி வருவதாகவும் அனைத்து இந்திய இமாம் கவுன்சில் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் திரு. ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அனைத்து இந்திய இமாம் கவுன்சில் அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இமாம்ஸ் கவுன்சில் அமைப்பினர் தமிழகத்தில் மதரீதியான மோதலை உருவாக்கும் வகையில் பாஜகவினர் பேசி வருவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Categories

Tech |