Categories
உலக செய்திகள்

இஸ்லாமிய வருடப் பிறப்பு…23ஆம் தேதி பொது விடுமுறை…மனிதவளத்துறை பொது ஆணையம்…!!!

அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் மனிதவளத்துறை பொது ஆணையம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அரசுத்துறைகளுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களும் வாராந்திர பொது விடுமுறை நாள். ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை விடப்படுவதால் இந்த வார விடுமுறை  3 நாட்களாக உள்ளன. மேலும் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பபு என்பது பிறை பார்க்கப்படுவதை பொறுத்ததே அமையும்”
அமீரக மனிதவளம் மற்றும் அமீரகத்தைச் சேர்ந்தவர்களை பணியமர்த்தும் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தனியார் துறை நிறுவனங்களுக்கு ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி வருகின்ற 23ஆம் தேதி பொது விடுமுறை விடப்படும்’’ என அறிவித்துள்ளது.

Categories

Tech |