மயிலாடுதுறையில் தரங்கம்பாடி அருகே உள்ள சேர்த்துரில் விஎஒ வாக பணியாற்ற்றுபவர் புருஷோத்தமன். இவருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பின்பு மூன்று மதங்கள் சார்பில் திருமணம் செய்ய வேண்டும் என்று மணமகன் புருஷோத்தமன் பெற்றோரிடம் கூறியுள்ளார். புருஷோத்தமன் எடுத்த முடிவுக்கு பெற்றோர்கள் ஒப்புக்கொண்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்து செய்யப்பட்டன.
ஒரே பத்திரிகையில் மூன்று முறையான விபரங்கள் அச்சடித்து உறவினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிகலன்கள் அணிந்து திருமணத்தை முடித்துவிட்டு பின்னர் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றியும் இன்று காலை இந்து முறைப்படி தாலி கட்டியும் திருமணத்தை நடத்தி முடித்தனர்.
இதுபற்றி புருஷோத்தமன் கூறும்போது “எனக்கு முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம். சாதி சமய வேறுபாடின்றி நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு திருமணம் செய்தேன்” என்றார். மூன்று முறைப்படி நடந்த இந்த வித்தியாசமான திருமணத்தை மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.