தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ சேவை மைய ம் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக செயல்பட்டு வருகிறது. அரசின் சேவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்று சேருமாறு அரசு சார்பாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அரசு துறையின் சேவைகளை எந்த வித சிரமமும் இன்றி விரைவாக பெற்று பயனடையும் விதமாக மாவட்ட முழுவதும் 500 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும் இ சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் விதமாக சாதி சான்றிதழ், பிறப்பு, இறப்பு, வருமானம், முதல் பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி, விதவை பெண் சான்றிதழ், ஓய்வூதியர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஊனமுற்றோருக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர மின் கட்டணம் செலுத்துதல், புதிய ரேஷன் கார்டு பெறுதல் உள்ளிட்ட 186 வகையான சான்றிதழ்களை இ சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் எளிதாக பெறலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.