Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இ-சேவை மையத்தையும் விட்டு வைக்கலயா…? மர்ம நபர்களின் சதிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

இ-சேவை மையத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் கணினியை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு பொது இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆனந்தன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தன் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு இ-சேவை மையத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

அதன்பின் இ-சேவை மையத்திற்கு மறுநாள் காலை வேலைக்குச் சென்ற ஆனந்தன் பூட்டு உடைக்கப்பட்டு கணினி திருபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து ஆனந்தன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |