Categories
மாநில செய்திகள்

இ-பதிவு கட்டாயம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர பிற மாநிலங்களிலிருந்து வரும் அனைவருக்கும் இ-பதிவு கட்டாயம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படும் என்றும், புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி மாதம் முதல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து நீண்ட நாட்களாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த மெரினா கடற்கரை டிசம்பர் 14ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |