Categories
மாநில செய்திகள்

இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு…. இந்த எண்ணுக்கு அழையுங்கள் – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கினை மே-10 முதல் மே-24 வரை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் விதமாக தமிழக அரசு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறையை கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் இ-பதிவு நடைமுறையில் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்கள் இருந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

சாதாரண மக்களால் இ-பதிவு முறையை சரியாக பயன்படுத்த முடியாது. எனவே அதனை சரி செய்வதற்கும், இது குறித்த சந்தேகங்களுக்கும் 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்றும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்புகொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |