Categories
தேசிய செய்திகள்

இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு… தமிழக எல்லையில் அதிரடி..!!

தமிழக எல்லையில் வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து
கொண்டே உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இந்த நடவடிக்கைகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் கூறப்படுகின்றது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன

Categories

Tech |