முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூரில் வசித்து வரும் ஜெகதீஷ்குமார் என்பவர் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்றுவர இ-பாஸ் பெற்று கொடுத்துள்ளார். அவ்வாறு பெற்றுத்தரும் இ-பாஸ்க்கு தலா 2,500 ரூபாய் வசூலித்து வந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் செய்துள்ள முறைகேடுகள் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூரில் முறைகேடாக இ-பாஸ் வழங்கி வருவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.