இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளதால் நிறைய பேர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கின்றனர். அதேசமயம் வாகனங்கள் வாங்க நினைப்பவர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக சமீபகாலமாக மக்கள் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத வகையில் 68,324 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஓலா நிறுவனத்தின் மின்சார பைக்குகளை மக்கள் (15,095) அதிகம் வாங்கியுள்ளனர். அடுத்தபடியாக ஒகினாவா (11,754), ஆம்பியர் (8812) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.