Categories
தேசிய செய்திகள்

இ-வாகனம் இனி செம மைலேஜ்…. பிரபல 2 நிறுவனங்கள் சூப்பர் அறிவிப்பு…..!!!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் அலுமினியம் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிக்கும் திட்டத்தை பிர்லா குரூப் நிறுவனமும், இஸ்ரேலின் பைனெர்ஜி & IOP நிறுவனமும் இணைந்து தொடங்குகின்றன. இந்த பேட்டரிகளை விரைவாக சார்ஜ் செய்யலாம் எனவும், இவை நீண்ட தூரம் மைலேஜ் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு உகந்ததாக இந்த பேட்டரிகள் இருக்கும் எனவும், இந்தியா முழுவதும் இதை விநியோகம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |