ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனமானது இந்திய சந்தையில் விற்பனை செய்த ப்ரைஸ் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மாடல்களின் பேட்டரி பிரச்சனையை சரி செய்வதற்காக 3,215-இ ஸ்கூட்டர்களை ரீகால் செய்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை கொண்டு வருமாறு ஒகினவா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரீ கால் செய்யப்படும் இந்த ஸ்கூட்டரின் பேட்டரிகளில் லூஸ் கனெக்சன் அல்லது வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா என்பதை ஓகினவா நிறுவனம் சோதனை செய்ய உள்ளது.
ஒருவேளை ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை இலவசமாக சரி செய்து வழங்க உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட இ-ஸ்கூட்டர்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் அதன் டீலர்களிடம் தொடர்புகொண்டு ஸ்கூட்டரை சரி செய்ய வழங்கியுள்ளது. சமீபகாலமாக ஸ்கூட்டர்களை வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக ஒகினாவா நிறுவனம் அறிவித்துள்ளது.