தொகுப்பாளினி டிடி ஈஃபிள் டவர் முன் நின்று எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் டிடி (திவ்யதர்ஷினி). இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் சர்வம் தாளமயம், சரோஜா, ப.பாண்டி போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
https://www.instagram.com/p/CWVJLoBvMgV/?utm_source=ig_embed&ig_rid=a050ef96-386e-4b26-8eac-074108eeab9e
இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக டிடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் டிடி பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் டவர் முன் நின்று செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.