Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈசியாக… ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி…!!!

ஆட்டுக்கால் சூப் செய்ய தேவையான பொருள்கள்:

ஆட்டுக்கால்              – 1 செட் (4 கால்)
மிளகு                           –  3 டீஸ்பூன்
மல்லி                           – 2 டீஸ்பூன்
சீரகம்                             – 2 டீஸ்பூன்
பூண்டு                            – 6 பல்
மஞ்சள் தூள்               – அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி                         – 1 (விரும்பினால்)
நல்லெண்ணெய்       – 2 டீஸ்பூன்
உப்பு                                – தேவைக்கு
மல்லி இலை            – சிறிது
கறிவேப்பிலை       – 2 இணுக்கு

செய்முறை:

முதலில் ஆட்டு கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். பின் சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும். அதில் ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும்.

அதன் பின் மீதியை அரைக்க முழுதாக வைக்கவும். மிளகு, சீரகம், மல்லி லேசாக தட்டி கொள்ளவும். மிக்ஸியில் மூன்றையும் போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

அடுத்து குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட) தண்ணீர் வைத்து உப்பு போடாமல், அரைத்த மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

பின்பு இரண்டு விசில் வந்தவுடன் அரை மணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும். ஆவி அடங்கியவுடன் திறந்து, உப்பு சேர்க்கவும்.

அதன் அடுத்து  2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றவும். இறுதியில் மல்லி இலை தூவினால், சுவையான மற்றும் சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி.

Categories

Tech |