முந்திரிப்பருப்பு பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
முந்திரி – அரை கிலோ
கடலை மாவு -அரை கிலோ
வனஸ்பதி -கால் கிலோ
பெரிய வெங்காயம் -கால் கிலோ
அரிசி மாவு – 150 கிராம்
பச்சை மிளகாய் – 5
கறிவேப்பிலை – 3 கொத்து
இஞ்சி – சிறிய துண்டு
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் வனஸ்பதியை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மாவு அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் பிசைந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் எடுத்து போட்டோ எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கவும்.
அதன் மீது கறிவேப்பிலையை போட்டு வறுத்து எடுத்தால் சூடாக பரிமாறினால் முந்திரி பருப்பு பக்கோடா ரெடி.