பொதுவாக அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை, தேசிய விடுமுறை போன்றவற்றுடன் சேர்த்து வருடந்தோறும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு சம்பளத்துடன்கூடிய விடுமுறை விடப்படும். அந்த அடிப்படையில் சம்பளத்துடன்கூடிய விடுமுறை நாட்களை ஊழியர்கள் தங்களது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தாத ஊழியர்கள் அதற்குரிய சம்பளத் தொகையை பணமாக பெற்றுக்கொள்ள இயலும். இந்த செயல்முறையானது ஈட்டிய விடுப்பு என அழைக்கப்படுகிறது.
அதன்படி இதுபோன்ற ஈட்டிய விடுப்பு சலுகைகள் அனைத்து அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு தொடர்பாக தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஊதியம் இல்லா அசாதாரண விடுப்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வி ஆணையரகம் விளக்கமளித்துள்ளது.
இது பற்றி பள்ளிக்கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு விடுப்பு விதிகள் (TNLR) விதி (9) a-ல் உள்ளபடி ஊதியம் இல்லா அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஊதியம் இல்லா தமிழ்நாடு விடுப்பு விதிகளின் கீழ் அசாதாரண விடுப்புக்கு மட்டுமே ஈட்டியவிடுப்பு குறைக்கப்பட வேண்டும் என மனுதாரர் கோரிய தகவல்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.