ஈபிஎஸ் க்கும் தனக்கும் எந்த பாகுபாடும் கிடையாது என்றும், பார்ப்பவர்கள் கண்ணில் தான் கோளாறு உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ்,ஓபிஎஸ் தனித்தனியாக நிவாரண பணிகள் மேற்கொள்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் நாங்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் எந்தவித பாகுபாடும் கிடையாது. உங்களுடைய பார்வை தான் அந்த மாதிரி பார்க்குறீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.