தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டங்களில் பங்கேற்று அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அரசியல் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசியல் செய்ய வேண்டியது இல்லை. அவர் ஆலோசனை வழங்கினார் அதனை தயக்கமின்றி செயல்படுத்த தயாராக உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
Categories