Categories
மாநில செய்திகள்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சந்தித்த பாஜக தலைவர்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…..!!!!

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை பா.ஜ.க தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சந்தித்தனர். அவ்வாறு ஈபிஎஸ், ஓபிஎஸ் போன்றோரை அண்ணாமலை தனித்தனியாக சந்தித்ததுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரீஸ்வேஸ் சாலையிலுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி வருகை தந்துள்ளனர்.

வரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுகவின் ஆதரவு அளிக்ககோரி ஓ.பன்னீர்செல்வத்திடம், அண்ணாமலை மற்றும் சிடி ரவி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு அண்ணாமலை மற்றும் சிடி ரவி சென்றிருந்தனர். அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |