Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்-ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த 7 அமைச்சர்கள்… சற்றுமுன் திடீர் பரபரப்பு…!!!

தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த 7 அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை டிடிவி தினகரன் விரைவில் அதிமுகவை மீட்டு எடுப்போம் என்று சூளுரைத்தார். இதனையடுத்து 7 அமைச்சர்கள் சசிகலாவுடன் பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் ஆளாக பேசியது மதுரையை அடையாளமாகக் கொண்ட அமைச்சர். ஏழு அமைச்சர்களும் வருகின்ற 18ம் தேதி சசிகலாவை சந்திப்பார்கள் என்றும், அவர்களுடன் சில முக்கிய நிர்வாகிகள் வருவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |