மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு திரும்பிய போது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது யாரோ ஒருவர் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் தூண்டுதலின் காரணமாக அமமுகவினர் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.