Categories
உலக செய்திகள்

ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்த பெண்…. கடும் விமர்சனங்களால்… எடுத்துள்ள முடிவு…!!

பெண் ஒருவர் ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்ததை தொடர்ந்து அதனுடனான தன் உறவை முறித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 

உலகில் பல வித்தியாசமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல திருமணங்கள் செய்பவர்கள், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள். மேலும் தற்போது உயிரற்ற பொருட்களையும் சிலர் திருமணம் செய்து வருகின்றனர். இவ்வாறு உயிரற்ற பொருட்களால் கவரப்படுவது objectum sexuality என்று கூறப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த Erika labrie என்ற பெண் பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்தால் கவரப்பட்டுளார்.  இதனைத்தொடர்ந்து கடந்த 2007 ஆம் வருடத்தில் Erika ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்பு அவரின் பெயரை Erika la tour Eifil என்று மாற்றியுள்ளார். அதாவது வழக்கமாக பெண்கள் தங்கள் பெயரின் பின்னால் கணவன் பெயரை சேர்ப்பார்கள். அதுபோல Erika கோபுரத்தின் பெயரை சேர்த்துள்ளார். மேலும் இதனால் Erika கடுமையாக விமர்சிக்கப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு பிறகு ஈபிள் கோபுரதுடனான தன் உறவை முறித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், தன்னையும் ஈபிளையும் பிரிப்பதற்காக ஊடகங்கள் பெரும் பங்காற்றியது. ஆனால் என் மனதில் இருக்கும் ஈபிளை அவர்களால் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |