மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக விருப்ப மனு இன்று முதல் தொடங்கியது. அந்த வகையில் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் விருப்ப மனுக்களை இன்று காலை முதல் அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவை மாவட்டத்தில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றதால் முன்னாள் முதல் அமைச்சர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக வழங்கினர்.
தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற பின் கோவையில் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர் . என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நான்கு ஆண்டுகள் தொடர நானே காரணம் என்பதற்காக தான் என்னை குறி வைக்கிறார்கள். அதற்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.