Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈமூ கோழி மோசடி – 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈமு கோழிப்பண்ணை ஆரம்பித்து மக்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பட்டக்காரன் பாளையத்தை சேர்ந்த கண்ணுச்சாமி மற்றும் மோகனசுந்தரம் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆர். கே ஈமு பாம்ஸ்  என்ற பண்ணையை துவங்கி நடத்தி வந்தனர்.தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் பெருகும் எனவும், பல்வேறு வகையில் லாபம் கிடைக்கும் எனறும் கூறி பெருந்துறை சுற்றுவட்டார மாவட்டம் மக்களிடமிருந்து  2 கோடியே 40 லட்சம் பண மோசடி செய்துள்னர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி குறித்து வழக்கு விசாரணையில்  கண்ணுச்சாமி மற்றுமொரு மோகனசுந்தரம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள்   சிறை தண்டனையும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

Categories

Tech |