பிரான்சில் இரவு உணவில் இடையூறு ஏற்படுத்திய ஈயை கொல்ல முயன்ற முதியவர் ஒருவர் தனது வீட்டை இழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் செனாட் என்ற கிராமத்தில் 82 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் இரவு உணவு சாப்பிடுவதற்கு அமர்ந்த போது அவரைச் சுற்றி ஒன்று வட்டாரமிட்டுள்ளது. அதனால் அதனை கொள்வதற்கு மின்சார பேட் ஒன்றை அவர் பயன்படுத்தியுள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக அவரின் வீட்டு சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை அவர் சரியாக கவனிக்காமல் ஈயை கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அப்போது மின்சார பேட்டில் இருந்து கிளம்பிய நெருப்பு, இயற்கை எரிவாயுவை பற்றிக்கொண்டு சிலிண்டரை அடைத்ததால் பெருத்த வெடி சத்தம் கேட்டுள்ளது.
முதியவர் அது என்னவென்று அறிந்து கொள்வதற்குள் சமையல் அறை முழுவதும் இடிந்து விழுந்தது. மேலும் வீட்டின் மேற்கூரையில் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது. முதியவரின் கையில் தீக்காயம் ஏற்பட்டால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் வீடு சேதம் அடைந்துள்ளதால் அவரை வேறு இடத்தில் தங்க வைக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வெடிவிபத்தில் ஈ என்ன ஆனது என்று தெளிவாகத் தெரியவில்லை.