பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத் திற்குள் திடீரென ஏராளமான மக்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சியா தலைவர் முக்-தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இவர்கள் பிரதமராக பதவி ஏற்க போகும் முகமது அல் சூடானியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் முகமதுக்கு ஈரான் மிகவும் நெருக்கமாக செயல் படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை கைவிடுமாறு பிரதமராக பதவி ஏற்கும் முஸ்தபா கேட்டுக்கொண்டதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு காவல்துறையினருக்கும் ராணுவ வீரர்களுக்கும் உத்தரவிட்டார்.
கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலின் போது முகமது அல்சதரின் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்க இருந்த நிலையில் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பால், முகமது பிரதமராக பதவியேற்றார். கடந்த புதன்கிழமை அன்றும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் நேற்று மறுபடியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டு வீசி ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து மக்கள் போராடுவது என்பது அந்நாட்டில் பலமுறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.