Categories
தேசிய செய்திகள்

ஈரானில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் – இந்திய தூதர் தகவல்!

ஈரானில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரானுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. சீனாவில் சிக்கியிருத்த 300க்கும் மேற்ட்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் அனுப்பு மீட்டு வந்தனர்.

அதே போல ஈரான் நாட்டிலும் இந்தியாவைச் சேர்ந்த 450 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் ஈரானில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரானுக்கான இந்திய தூதர் தாமு கட்டம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |