Categories
உலக செய்திகள்

ஈரானில் கடும் வெள்ளப்பெருக்கு…. 69 பேர் பலி…. 45 பேர் மாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஈரான் நாட்டில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் செஹர்மேகல், தெக்ரான், மாந்தரன், லோரெஸ்தான், யாஸ்த், இஸ்பஹான், பத்தியாரி உள்ளிட்ட 24 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து 45 பேர் காணாமல் போனதாகவும், 41 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல மாகாணங்களுக்கு தீவிர வெள்ள எச்சரிக்கை அபாயம் விடப்பட்டுள்ளது.

Categories

Tech |