Categories
உலக செய்திகள்

ஈரானில் திடீர் துப்பாக்கிச் சூடு… பயங்கர தாக்குதலில் 5 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!!!!

ஈரானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானில் அமைந்துள்ள இசே என்னும் நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு  நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில்  10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறி நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது பயங்கரவாத தாக்குதல் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குசெஸ்தான் மாகாண துணை கவர்னர் வலியொல்லா ஹயாதி பேசும்போது, இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி என ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |