ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்தார். இதனை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை நாடு முழுவதும் 150 க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவில் ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் குறிப்பிட்டு வருகிறது. ஈரானில் நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஹேக்கர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. அந்த நாட்டில் அணு ஆற்றல் கழகத்தின் துணை நிறுவனம் ஒன்றின் ஈமெயில் சர்வர் ஹாங்கிங் செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வரானது ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுக்காக பணியாற்றி வருகின்றது.
பெர்சியன் வளைகுடா பகுதியில் அமைந்திருக்கும் பூஷெர் அணுஉலையின் ஈமெயில் சர்வரை ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் என ஈரான் அணு ஆற்றல் கழகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த சர்வரில் பயனாளர்களின் ஈமெயில்கள் இருக்கிறது அவற்றின் தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் தினசரி தகவல் பரிமாற்றங்கள் போன்ற பிற பொதுவான தகவல்களும் இருக்கிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2011 ஆம் வருடம் ரஷ்ய தொழிற்ப உதவியுடன் ஈரானின் முதல் அணுமின் உளையான பூஷெர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ஈரானிய இஸ்லாமிய குடியரசின் நியூஸ் நெட்வொர்க் சார்பிலான தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பின் போது கடந்த ஒன்பதாம் தேதி புகுந்த புரட்சிக்காரர்கள் சில நிமிடங்கள் வரை நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கின்றனர்.
தெற்கு நகரில் அந்த நாட்டு மத தலைவரான அயதுல்லா அலி காமினி கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டபோதும் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அதில் நிகழ்ச்சி சில வினாடிகள் வரை போராட்டக்காரர்களின் செயல் ஹாக்கிங் செய்யப்பட்டு பெரிய மீசை, தாடி மற்றும் பருவங்களுடன் கூடிய கருப்பு வண்ண முகமூடி அணிந்த கார்ட்டூன் வரைபட தோற்றம் காட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஹேக்கிங் சம்பவத்திற்கு அவர்கள் பொறுப்பேற்று இருக்கின்றனர் அதனை தொடர்ந்து காமினியின் படமும் ஈரானில் கடந்த மாதம் உயிரிழந்த இளம் பெண்களின் புகைப்படங்களும் இடம்பெற்று இருந்தது இந்த புகைப்படம் சில வினாடிகள் வரைத் திரையில் காட்டப்பட்டுள்ளது. மேலும் எங்களுடன் இணைந்து போராட வாருங்கள் என்று செய்தியும் அந்த புகைப்படங்களுடன் காட்டப்பட்டிருக்கிறது எங்களுடைய இளைஞர்களின் ரத்தம் உங்கள் பிடியிலிருந்து வழிந்தோடுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.