ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தினால் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி(22) என்னும் குர்து இனப்பெண் உயிரிழந்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நாட்டின் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 700க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.