ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் 11-வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ஈரானில் நாளுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் பாதிப்பு எண்ணிக்கை 3.5 இலட்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் 2,444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,50,279 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருப்பதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29,125 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் 3.02 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக என அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது.