Categories
உலக செய்திகள்

“ஈரான் அரசு ரஷ்ய அதிபரை விட மோசமானது”… போராட்டத்தில் குதித்த ஈரானிய மக்கள்…!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களை க் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த போரில் உக்ரைனின் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே நேரம் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி இருக்கிறது மின் நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்காக ட்ரோன்களை ஈரானிடம் இருந்து ரஷ்யா வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது பற்றிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி பேசும்போது ஈரான் ராணுவம் கிருமியா பகுதியில் நேரடியாகவே களமிறங்கி ரஷ்ய ராணுவத்திற்கு உதவி வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சூழலில் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் ஈரானியர்கள் ஈரான் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றன. மேலும் ஈரான் அரசு ரஷ்ய அதிபர் புதினை விட மோசமானது என குற்றம் சாட்டிய அவர்கள் ஈரான் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவிற்கு உதவுவதை ஈரான் கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

Categories

Tech |