கடந்த 2020 ஆம் வருடம் உக்ரைன் பயணிகள் விமானம், ஈரான் இராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கனடா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரானிலிருந்து கனடாவிற்கு கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி 8ஆம் தேதியன்று புறப்பட்ட விமானத்தை ஈரான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதில் 176 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பில் ஈரானுக்கு எதிராக ஒன்ராரியோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பில் தீர்ப்பளித்த நீதிபதி Edward Belobaba, இது வேண்டுமென்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், எனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். தற்போது வரை இந்த தீர்ப்பிற்கு ஈரான் அதிகாரிகள் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.