Categories
தேசிய செய்திகள்

ஈரான் பயணிகள் விமானம்…. திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்…..!!!!!

சீனாவிற்குச் சென்றுகொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானம் இந்திய வான் வெளியில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்தியபோர் ஜெட் விமானங்கள் பாதுகாப்புக்காகச் சென்றது. இது தொடர்பாக இந்திய விமானப்படையிலிருந்து வெளியாகி இருக்கும் தகவலில், இந்திய வான் வெளியில் மகான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து இந்திய விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனே ஈரான் பயணிகளின் விமானத்திற்கு பாதுகாப்புக்காக இந்திய ஜெட்விமானங்களானது பறந்துசென்றது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் விமான நிலையங்களில் அந்த விமானம் தரையிறங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் தன் பாதையினை திருப்பிக்கொண்டு இந்த விமான நிலையங்களுக்கு வருவதற்கு விமானி மறுத்து விட்டார். அதன்பின் விமானத்தில் பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் விமானம் சீனாவிற்குப் பறக்க அனுமதிக்கப்பட்டது.

Categories

Tech |