மாஸ்கோவிலிருந்து ஈரான் புறப்பட்டுச் சென்ற மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஈரான் மந்திரியை நேரில் சந்தித்து பேசயிருக்கிறார்.
மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மூன்று நாள் ரஷ்யா பயணம் சென்றிருந்தார். அந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது சீன பாதுகாப்பு மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார். இந்நிலையில் ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் நேற்று ஈரான் புறப்பட்டு சென்றார். ஈரான் சென்றடைந்த அவர் அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை நேரில் சந்தித்து பேசுவதற்கு தயாராக உள்ளார்.
அந்த சந்திப்பின் போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பெர்சியன் வளைகுடா நாடுகள் நிலைமை பற்றி ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமன்றி ஈரானில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்திய திட்டங்களை மேம்படுத்துவது பற்றியும் ஈரானில் அதிகரிக்கும் சீன முதலீடுகள் குறித்தும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.