Categories
உலக செய்திகள்

ஈரான் – ரஷ்யாவின் புதிய இராணுவ ஒப்பந்தம்… என்ன தெரியுமா…? பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!!

கடந்த அக்டோபர் மாதம் உக்ரைனில் உள்ள அணுநிலையங்கள் மற்றும் பல முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த ரஷ்யா உதவி உள்ளதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனவும் அமெரிக்க தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஈரானிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பாக 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யா வாங்கியதிலிருந்து ஈரான் – அமெரிக்கா இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செய்தி தொடர்பாளர் பேசும்போது, ரஷ்யா புதிய ராணுவ ஒப்பந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதாவது மீண்டும் ஈரானுக்கு ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவம் சார்ந்த ஆயுதங்கள் வழங்குவது பற்றி ஆலோசித்து  வருகிறது.

மேலும் ஈரானுக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை செய்து வருவதனால் ஈரான் மற்றும் ரஷ்யா இடையான ஒப்பந்தங்கள் மேலும் வளமடைந்துள்ளது. ரஷ்யாவில் இந்த நகர்வு உக்ரைன் மட்டுமல்லாமல் ஈரானை சுற்றியுள்ள நாடுகளுக்கும் பெரும் ஆபத்து என தெரிவித்துள்ளார். இதில் உலக நாடுகள் மத்தியில் இரு தரப்பினருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்ற செய்தி தொடர்பாளர் ஜான்கிர்பி கூறியதாவது, ரஷ்யா ஈரானுடன் இணைந்து செயல்படுவது அதன் ஆயுதங்கள், மேம்பாடு வர்த்தகம் போன்ற துறைகளில் உதவும். அதே சமயம் ரஷ்யா அதன் பிரத்தியேக ராணுவ ஆயுதங்கள் தொழில்நுட்பங்களை ஈரானுக்கு கொடுப்பது பற்றி தான் எங்களது கவலை என தெரிவித்துள்ளார். உக்ரைன் , ரஷ்யா போரை வைத்து தங்களது ஆதிக்கத்தை மேற்கத்திய நாடுகள் ஆதாயம் தேடிக் கொள்கிறது எனவும் மேற்கத்திய நாடுகள் மீதான நம்பிக்கை முற்றிலுமாக போய்விட்டது எனவும் ரஷ்ய தலைவர் விளாடிமிர்  புதின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |