பயணிகள் ரயிலில் கழிவறை மற்றும் கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இதில் ஈரோடு – கோயம்புத்தூர், சேலம்-கோயம்புத்தூர், ஈரோடு-பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூர், பாலக்காடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மெமு ரயில் இயங்கி வந்தது. இந்த ரயிலால் வேலைக்கு செல்பவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் பயன் பெற்றனர். இந்த ரயில் சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.
இந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு மெமு ரயில் இயக்கப்பட்டது. அதன்படி ஈரோட்டில் இருந்து காலை 7:15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9:45 மணியளவில் கோயம்புத்தூரை சென்றடையும். இதனையடுத்து கோயம்புத்தூரில் இருந்து மாலை 6:40 மணி அளவில் கிளம்பும் ரயில் இரவு 9:15 ஈரோட்டை சென்றடையும். இந்த ரயிலில் உள்ளூர்வாசிகள் சிலர் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக குற்றங்கள் எழுந்தது.
இதன் காரணமாக தற்போது சென்னை ஐசிஎப்ல் தயாரான எடை குறைவான பெட்டிகள் உடைய அதி நவீன ரயில் இயக்க படுவதுடன், அதில் கழிவறை வசதி மற்றும் ஒரு பெட்டிகளுக்கு 4 கண்காணிப்பு கேமராக்கள் வீதம் 8 பெட்டிகளுக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் இனி அமைக்கப்படும் ரயில் நிலையம் பற்றிய அறிவிப்பு பலகை மற்றும் அனைத்து பெட்டிகளிலும் பாடல்கள் ஒலிபரப்ப ஸ்பீக்கர் வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.