ஈரோடு மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான இடங்களில் இருந்து பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாக தகவல்கள் வந்தது.
இதனால் பழையபாளையம், மாணிக்கம் பாளையம், வில்லரசன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் 17 பாம்புகள் பிடிபட்டன. அதில் 3 நாகப்பாம்பு, 14 சாரைப்பாம்பு. இதனையடுத்து பிடிப்பட்ட பாம்புகள் ஈரோடு ரோஜா நகரில் இருக்கும் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் அந்த பாம்புகளை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.