Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி… “வள்ளி தெய்வானையுடன் வேலாயுதசாமி தேரோட்டத்தில் தரிசனம்”…!!!

நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிவகிரியில் உள்ள வேலாயுதசாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரியில் புகழ்வாய்ந்த வேலாயுதசாமி கோவில் இருக்கின்றது. நேற்று சித்ரா பௌர்ணமியையொட்டி இக்கோவிலில் காலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானை, வேலாயுதசாமி மணமக்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு 7.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் மந்திரம் சொல்ல சாமி திருக்கல்யாணம் நடந்தது.

இதையடுத்து சாமி தரிசனம் செய்ய வந்த மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்பிறகு காலை 10 மணிக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தில் வேலாயுதசாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் வந்தார். சிறிய தேரில் விநாயகப்பெருமான் வந்தார். இந்தத் தேரை ஏராளமான பக்தர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்தத்தேரானது இன்று மாலை ஆறுமணிக்கு நிலை சேர்க்கப்படுகின்றது. நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நடராஜர் தரிசனம் நடைபெற இருக்கின்றது.

Categories

Tech |