தங்கையின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு சித்தி மகனுடன் பைக்கில் வந்த அக்காள் தங்கை லாரி மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செங்கலப்பரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய இளைய மகளின் பிறந்தநாளை முன்னிட்டு லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு இவர்களுடைய சித்தி மகனுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து வீட்டுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது .
அப்போது சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் மூன்று பேரும் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி அஜாக்கிரதையாக வந்ததால் இவர்கள் வந்த பைக்கில் மோதி அக்காள் தங்கை இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். தங்கை நிஷா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், அக்கா ஷாலினி சிஎன்சி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாடி விட்டு திரும்பிய போது ஏற்பட்ட இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.