Categories
மாநில செய்திகள்

ஈரோடு TO நெல்லை மீண்டும்…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

ஈரோட்டிலிருந்து நெல்லைக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. பின்  கொரோனா குறைந்ததை அடுத்து ஈரோடு- நெல்லை பயணிகள் ரயிலை மீண்டுமாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். அதனை தொடர்ந்து ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அந்த வகையில் ஈரோட்டிலிருந்து நெல்லைக்கு நேற்று மதியம் 1:35 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.

இந்த ரயிலில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர். தினசரி மதியம் 1:35 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்படும் ரயில் நெல்லைக்கு இரவு9:45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து காலை 6:15 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2:30 மணிக்கு ஈரோடுக்கு வந்தடையும். இதேபோன்று ஈரோடு-மேட்டூர் அணை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுதல் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த ரயிலானது அதிகாலை 5 மணிக்கு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு காலை 8:15 மணிக்கு மேட்டூர் அணைக்கு சென்று விடும். இரவு 7 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து புறப்படும் ரயில் 10 மணிக்கு ஈரோட்டுக்கு வருகிறது. அத்துடன் ஈரோடு வழியே கோவை-சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேற்று முதல் இயக்கப்பட்டது.

Categories

Tech |