ஈரோடு அருகே இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்தி நரபலி கொடுக்க திட்டமிட்ட புகாரில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே உள்ளரங்கம் பாளையம் ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது பெற்றோர், சித்தி மற்றும் தாயை திருமணம் செய்து கொண்ட பெண் ஆகிய நால்வரும் கொடுமைபடுத்தியதாகவும், நரபலி கொடுக்க திட்டமிட்டதால் அங்கிருந்து தப்பி தங்களது தாத்தா, பாட்டி ஊரான புன்செய் புளியம்பட்டிக்கு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை திருப்பூரில் மாரியப்பன் என்பவரது வீட்டில் நான்கு பேரும் மறைந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த சிறுவர்களின் சந்தை ராமலிங்கம், தாயார் ரஞ்சிதம், சித்தி இந்துமதி, தாயார் திருமணம் செய்து கொண்ட தனலட்சுமி ஆகிய நால்வருக்கும் அடைக்கலம் கொடுத்த மாரியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.